வழக்கமாக சாப்பிடும் அரிசி வகைகளை விட, சிறுதானியங்களில் கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக மைக்ரோ நியூட்ரியன்ட் என்று கூறப்படும் நுண்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
உடலில் ஒரு சில குறிப்பிட்ட பாதிப்புகள் அல்லது குறைபாடுகளுக்கு சிறுதானியங்கள் உட்கொண்டால் நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில், உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் சோளத்தை சாப்பிட்டால் போதும், மிகச் சிறந்த நிவாரணமாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ஆயுர்வேத நிபுணரான மருத்துவர் பூஷன், யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் நோயாளிகள் சோள மாவில் செய்த ரொட்டியை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என்று கூறியிருக்கிறார்.
யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உருவாகும் ஒரு கழிவாகும். அனைவரின் உடலிலும் குறிப்பிட்ட அளவு வரை இந்த அமிலம் பாதிப்புகளை ஏற்படுத்தாது. மேலும், சிறுநீரில் வெளியேறிவிடும். ஆனால், இந்த அமிலம் அதிகரிக்கும் போது, சிறுநீரகத்தால் கூடுதல் அமிலத்தை வெளியேற்ற முடியாமல், ரத்தத்தில் கலந்து விடும். ரத்தத்தில் கழிவுப் பொருள் கலக்கும் போது மூட்டுகளில் சேகரிக்கப்பட்டு வலி, வீக்கம், அழற்சி உள்ளிட்டவை ஏற்படும். பியூரின் என்ற ஒரு காம்பவுண்டு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொண்டால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும். எனவே, இந்த அமிலத்தை குறைக்க வேண்டும் மற்றும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள், உடலில் வாயுவை ஏற்படுத்தக்கூடிய பீன்ஸ் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் பயிறு வகைகள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பீன்ஸ், கொண்டைகடலை, ராஜ்மா, அரிசி சாதம், உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். அதே போல, புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துவது ஆகிய இரண்டையும் தவிர்க்க வேண்டும், அல்லது நிறுத்த வேண்டும். ஆயுர்வேத மருத்துவரின் கூற்றுப்படி யூரிக் அமிலம் என்பது, உடலில் ஒரு நச்சாக தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நச்சை வெளியேற்றுவதற்கு சோளம் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
ஆங்கிலத்தில் sorghum என்றும், பரவலாக ஜோவார் என்றும் அழைக்கப்படும் சோளத்தை மாவாக்கி, அதில் செய்த ரொட்டியை தினசரி சாப்பிட்டு வருவது யூரிக் அமிலத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் ஒரு மேஜிகல் நிவாரணம் என்று மருத்துவர் தெரிவிக்கிறார்.
யூரிக் அமிலத்தை சோள மாவு ரொட்டி எவ்வாறு குறைக்கும்?
ஆயுர்வேத கூற்றுப்படி ஜோவர் என்பது கொழுப்பு நிறைந்த ஒரு உணவாகும். அது மட்டுமில்லாமல், இதில் நாள் முழுவதுக்குமான நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. சோளத்தை பயன்படுத்தி எந்த உணவு செய்தாலுமே அது செரிமானம் ஆவதற்கு தாமதமாகும், மேலும் இது வாதம் பித்தம் கபம் என்று உடலில் இருக்கும் மூன்று தோஷங்களையும் சீராக்குகிறது. பகலில் சோள ரொட்டி சாப்பிட்டால், அது நிதானமாக செரிமானமாகி இரவில் மூட்டுக்களில் தங்கியிருக்கும் யூரிக் அமில நச்சுப் படிமங்களை உடைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும் என்று ஆயுர்வேத மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சோள ரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
யூரிக் அமிலத்தைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும்
நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும்
நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சிறுநீரகம் ஆரோக்கியத்தை பாதுகாத்து செயல்பாட்டை மேம்படுத்துகிறது
வயிறு சம்மந்தமான கோளாறுகளை தடுக்கிறது
பொதுவாக மூட்டு வலி இருப்பவர்கள் புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். சோள ரொட்டி செய்து, அதை ஓரிரு நிமிடங்கள் புளிக்காத தயிரில் ஊற வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment