Join THAMIZHKADAL WhatsApp Groups
முதல்வர் ஸ்டாலின் நேற்று சிறப்பு செயலாக்க திட்டங்கள் குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்தார். இதில் முக்கியமான ஒரு திட்டம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
என்ன பேசினார்?:
அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன
இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார். அமைச்சர் பிடிஆர் போல பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மறுக்காமல் தங்கம் தென்னரசு அளித்த பதிலால், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment