தொடக்கப் பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்று ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1,2, 3-ஆம் வகுப்புகளுடன், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது.
அதாவது, ஈராசிரியா் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும். அதேபோன்று, 3 அல்லது 4 ஆசிரியா்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளைப் பிரித்து பாடங்களை நடத்த வேண்டும்.
மேலும், போதிய ஆசிரியா்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment