Join THAMIZHKADAL WhatsApp Groups
🔵⚪️ தமிழ்நாட்டில் 5 கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு உத்தரவு :
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி, வகுப்பு IIIன் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்கள் பெயர்களுக்கெதிரே குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
தமிழ்நாட்டில் 5 கல்வித்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.
தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குனர் (நிர்வாகம்) இரா.பூபதி பள்ளிக்கல்வி இயக்கக துணை இயக்குனராக நியமனம் செய்துள்ளனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனராக அ.ஞானகவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக பெ.அய்யண்ணனை கல்வித்துறை நியமித்துள்ளது.
தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனராக (நிர்வாகம்) ஜி.அருளரசு நியமனம் செய்துள்ளனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக ஜோ.அஞ்சலோவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
பூபதிக்கு பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனராக (என்.எஸ்.எஸ்.)கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
பெ.அய்யண்னனிடம் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஞானகவுரியிடம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கியும் அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment