Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் புதுதில்லியில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சிக்கு தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழக காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக டி.ஜி.பி. பதவி வகித்த நட்ராஜூம் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment