Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 27, 2023

TNPSC தேர்வு முடிவுகள்: உத்தேச தேதி அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1, இன்ஜினியரிங் பணி உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் தற்போதைய நிலை மற்றும் தேர்வு முடிவு வெளியாகும் தேதி விபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியானது.

அதில் 5,446 பணியிடங்களுக்கான குரூப் - 2 பிரதான தேர்வு முடிவு இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வனத்துறை தொழில் பழகுனர் பணி தேர்வு, தமிழக அரசு துறைகளில், உதவி பிரிவு அதிகாரி பணி தேர்வு, குரூப் - 3 பதவிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த புள்ளியியல் பணி தேர்வு, மீன் வளத்துறை ஆய்வாளர் பதவிக்கான நேர்முக தேர்வுக்கு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகின்றன. 

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவி, மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான முதல்நிலை தகுதி தேர்வு, வனத்துறை உதவி காவலர், நுாலகத்துறை பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு, ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இன்ஜினியரிங் பதவியில், 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சாலை ஆய்வாளர் பதவி தேர்வு முடிவுகள்ஆகஸ்டில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News