Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவினை வரும் 28ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1,2ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment