Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி, தனது, ஏ.ஐ.எம்., டிஎன் யுடியூப் சேனல் வழியே, போட்டித் தேர்வுகளுக்கு, இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது.
அடுத்த மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த தேர்வை எழுத, மாணவ, மாணவியர் இப்போதிருந்தே தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு உதவும் முயற்சியாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரி, குரூப் - 1 போட்டி தேர்வுக்கான இணையதள வகுப்புகளை, தனது யு டியூப் சேனல் வழியே ஆரம்பிக்க உள்ளது. இப்பயிற்சியில் தினசரி மூன்று வீடியோ வீதம், 180 வீடியோக்கள், அதற்கான படக் குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும், மாணவ, மாணவியர், 'நோக்கம்' மொபைல் ஆப்ஸ் வழியே, மாதிரித் தேர்வுகளை எழுதலாம்.அவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான விடைகளை, அவற்றுக்கான விவர குறிப்புகளுடன், சரி பார்த்துக் கொள்ளும் வசதி, இதில் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை, 2:30 மணிக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களுடன், ஆன்லைன் வழியே நேரடி தொடர்பு கொண்டு, சந்தேகங்ளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகள், வரும் 24ம் தேதி காலை 8:00 மணிக்கு, யு டியூப் சேனலில் துவங்குகிறது.
No comments:
Post a Comment