Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 10, 2023

ரூ.1000 உரிமைத் தொகை பெற டோக்கன்.. விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுக்க முடியாது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பப் படிவங்கள் பயனாளிகளுக்கு எப்படி வழங்கப்படும் தெரியுமா?

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கியுள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் முக்கியமானது ஆகும்.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்துவதால் இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மாதம் ரூ 1000 உரிமைத் தொகை பெறும் பயனாளிகளை கண்டறிவது தொடர்பாக அவர்களுக்கு முதல்வர் அறிவுரைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் இந்த உரிமைத் தொகையை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பயனாளிக்கு 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆண்டு வருமான 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஆனால் இதற்காக வருமான சான்றிதழ் எல்லாம் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினர் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து தனி பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. அதன் மூலம் தகுதியான பயனாளிகளை கண்டுபிடிக்க முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி கூறுகையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனி எண்களுடன் விண்ணப்பம் தயாரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்கள் அச்சடித்து முடித்ததும் அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விண்ணப்ப படிவங்களை சரி பார்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனித்தனியாக பிரிப்பார்கள். பின்னர் அந்த விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களில் ரேஷன் கார்டு எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும்.

அதில் எந்த தேதியில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே விண்ணப்பங்களை கொடுக்க முந்த வேண்டிய அவசியமே இல்லை. விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போதே தங்களுக்கு ரூ 1000 கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரியவந்துவிடும். இந்த விண்ணப்பங்களில் எவையெல்லாம் மாதம் ரூ 1000 பெற தகுதியிருக்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

ஒரு குடும்பத்திற்கு வழங்கும் படிவத்தை மற்ற குடும்பத்தினர் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு எண் வழங்கப்பட்டிருக்கும். எனவே ஒரு விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து அதை மற்றவர்கள் பயன்படுத்த இயலாது. எந்த பொருளும் வேண்டாம் என எழுதி கொடுத்திருப்பவர்களில் யாராவது உரிமைத் தொகை பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

இவையெல்லாம் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். விண்ணப்பங்களை வாங்கித் தருகிறேன், ஃபில்லப் செய்து தருகிறேன் என பெண்களை இடைத்தரகர்கள் ஏமாற்ற வேண்டிய வேலையே இருக்காது. காரணம் படிவத்தை வீட்டுக்கே சென்று கொடுக்கிறோம் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News