Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய மத்திய வங்கியில் ( Central Bank of India) காலியாக உள்ள 1000 மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 15.07.202 ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரங்கள்: 1000
கல்வித்தகுதிகள்: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CAIIB படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வங்கியில் 3 ஆண்டுகள் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். (அல்லது) ஏதேனும் ஒரு வங்கியில் எழுத்தர் பதவியில் ஆறு ஆண்டு கால அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.05.2023 அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
சம்பள விவரங்கள்: MMG SCALE II 48,170-1740(1)-49910-1990(10)-69,810
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
எழுத்துத் தேர்வு: இத்தேர்வு, கணினி குறித்த பொது விழிப்புணர்வு (Computer Awareness), வங்கி செயல்பாடுகள் (banking) தற்காலிக பொருளாதார நிகழ்வு மற்றும் பொது விழிப்புணர்வு (Present Economic Scenario & General Awareness) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டதாக இருக்கும்.
central bank of india notification
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த பதவிக்கு https://ibpsonline.ibps.in/cbimmjun23/ என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
No comments:
Post a Comment