Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 10, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2023

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

விளக்கம்:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.



பழமொழி :

A single swallow can not make a summer

தனி மரம் தோப்பாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.

 2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான்

காமராஜர்

பொது அறிவு :

1. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது?


விடை: குரு சிகரம்

1. இந்தியாவின் மிக நீளமான ஏரி எது?


விடை: வேம்பநாடு ஏரி

ஆரோக்ய வாழ்வு :

சக்கரை வள்ளிக் கிழங்கு :வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7 ஆகிய வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன.

ஜூலை 10


சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர்முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர்முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர்முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர்முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர்முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர்முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர்முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர் முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர்முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர்முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.

நீதிக்கதை

ஒரு நாள் வேடன் ஒருவன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றபோது,

திடீரென காட்டில் எங்கிருந்தோ ஒரு சிங்கத்தின் கர்ஜனை அவனை பயந்து ஓட வைத்தது.

அப்போது "மனிதா....பயப்படாதே உன் வலப்பக்கம் பார்....யாரோ விலங்குகளைப் பிடிக்க வைத்த கூண்டில் நான் மாட்டிகொண்டுவிட்டேன்.கூட்டைத் திறந்து என்னை விடுவிக்கிறாயா?" என்றது சிங்கம்

வேடன் சொன்னான்,"சிங்கமே... நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன் உன்னை விடுவித்தால் வெளியே வந்து என்னை உணவுக்காக நீ கொன்று விடுவாயே."

"கண்டிப்பாக மாட்டேன்.என்னை காப்பற்றும் உன்னைக் கொல்வேனா...மாட்டேன்,

அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற " என சிங்கம் சொல்ல ...

வேடன் கூண்டைத்திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று. இதனைக் கண்ட வேடன்

'சிங்கமே நீ செய்வது நியாயமா?, இதுதானா நீ காட்டும் நன்றியா? என்றான்".

அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய வேடன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்,சிங்கமும் நரி சொல்வதை தான் கேட்பதாகக் கூறியது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது

உதவி செய்த மனிதனைக் காப்பாற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது.

நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல

முதலிலிருந்து நடந்ததைக் கூறுங்கள் நீங்கள் எந்த கூண்டில் எப்படி இருந்தீர்கள்' என சிங்கத்திடம் வினவ ,

உடனே சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்று ' இங்கே இப்படித்தான் இருந்தேன் என்றது.'

இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

சிங்கத்திடம்' என்னை மன்னியுங்கள். நீங்கள் உங்களை காப்பற்றுபவனுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறி கொல்ல நினைப்பது நம்பிக்கை துரோகமாகும்.ஆகவே தான் இப்படி நடந்து கொண்டேன்' என்று நரி கூறியது.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

நீதி: ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

10.07. 2023

*இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளம்.

*கேரளாவில் கனமழை 19 பேர் பலி 10000 பேர் முகங்களில் தங்க வைப்பு. 

*ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் 240 விமான நிலையங்கள் என்ற இலக்கை அடைய மத்திய அரசு மும்முரம்-  மத்திய அமைச்சர்  தகவல். 

*வில்வித்தை சாம்பியன்ஷிப் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கம்.

*கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Due to continuous heavy rains in Himachal Pradesh, Beas river is overflowing.

 *Heavy rains in Kerala  19 people died and 10000 people got to stay in camp.

 *Chandrayaan-3 is scheduled to launch from Sriharikota on July 14 at 2.35 pm.

 The Central Government targetted to achieve 240 airports in the country within the next three years - Union Minister informed.

 *Two more golds for India at Archery Championship.

 *Canada Open Badminton: Indian player Lakshya Sen advances to final.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News