Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமமந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் ,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர்(OBC,EBC மற்றும் DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ/ மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்ப்டடுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ/ மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://vet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும்
11 மற்றும்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத் தேர்விற்கு 10.08.2023 க்குள் https://vet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு (OMR Based) 29.09.2023 ஆம் தேதி நடைபெறும் விண்ணப்பத்துடன் கைப்பேசி எண். ஆதார் எண். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://soclaljustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment