Join THAMIZHKADAL WhatsApp Groups
பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆக.14-ம்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சுமற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன.
இந்தப் படிப்புகளுக்கு பிளஸ்-2மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு 2023-2024-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் 66,696 பேர்விண்ணப்பித்தனர். பரிசீலனைக்குப் பின்னர், தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது. 2023-2024-ம்ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 66,696 பேர் விண்ணப்பித்தனர்.
No comments:
Post a Comment