Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 5, 2023

எஸ்.எஸ்.சி.,யில் 1558 காலிப் பணியிடங்களுக்கு அழைப்பு...!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட துணை அலுவலகங்கள் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில், காலியாக உள்ள 1558 தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி- 27.07.2023

பணியிடங்கள் விவரங்கள்

v பல்துறை சார் பணியாளர்கள் (Multi-tasking non technical staff) - 1,198 (தோராயமாக)

v ஹவில்தார் (Havaldar)- 360 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூலை 21க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆயிரத்து 558 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி உள்ளது.

தேர்வுக்கு ஜூலை 21 ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 22ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம்.

நேரடியாக சலான் முறையில், ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஜூலை 23 கடைசி ஆகும். வங்கி வழியாக ஜூலை 24 ஆகும்.

விண்ணப்பங்களில் திருத்தங்களை ஜூலை 26 முதல் 28ஆம் தேதிகளில் மேற்கொள்ள நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2023 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம்.

வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

15 மொழிகளுக்கு தேர்வெழுத வாய்ப்பு

எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தேர்வின் மூலம் ஆயிரத்து 558 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முறை

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு

ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும்.

how to apply ssc exam, how to prepare ssc exam

தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை 'க்ளிக்' செய்யவும்.

முகப்புப் பக்கத்தில் Apply என்பதை 'க்ளிக்' செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.

அத்திரையில் தெரியும் "Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2023" என்ற பக்கத்தினுள் சொடுக்கி, விண்ணப்பம் செய்ய வேண்டும்.

லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!

காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_MTS2023_30062023.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News