Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 31, 2023

ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.16,499 விலைக்கு லேப்டாப்.. 4GB ரேம், 256GB மெமரி.. யாருங்க விடுவா?

இந்தியாவில் முதல் முறையாக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலையில் ஜியோ நிறுவனத்தின் ஜியோபுக் (JioBook) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மீடியாடெக் எம்டி 8788 சிப்செட், 4ஜிபி ரேம், 4ஜி கனெக்டிவிட்டி என்று அம்சங்களில் பின்னியெடுக்கிறது. இதன் விற்பனை தேதி விவரங்கள் இதோ.

முகேஷ் அம்பானியின் வியாபார தந்திரத்தை பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் மலிவான விலைக்கு சிம் கார்டு தொடங்கி 4ஜி போன் வரையில் கொடுத்து, கோடிக்கணக்கான மக்களை சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்களாக மாற்றி விட்டார். மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில், ஜியோ நிறுவனத்தின் பிளான்களும், போன்களும் விலை குறைவாகவே இருப்பதால் மக்களும் தயக்கமின்றி ஜியோவுக்கு மாறுகின்றனர்.

இப்போது, போனை கடந்து லேப்டாப் விற்பனையில் ஜியோ நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ளது. அதுவும் வெறும் ரூ.16,499 விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ஜியோபுக் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பின்பு, ஒவ்வொரு வீட்டிலும் இந்த லேப்டாப் இருந்தாலும் ஆர்ச்சர்யப்படுவதற்கில்லை.

ஏனென்றால், மிக சரியாக மாணவர்களுக்கு ஏற்றவாறு, ஜியோபுக் லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையில், அதிகம் பணம் செலவு செய்யாமல், இந்த லேப்டாப்பை வாங்கிக்கொள்ள முடியும். இதனால், மிடில் கிளாஸ் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு லேப்டாப் வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்வார்கள். இந்த நேரத்தில் ஜியோபுக் லேப்டாப்பின் முழு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோபுக் அம்சங்கள் (JioBook Specifications): இந்த ஜியோபுக் லேப்டாப் 11.6 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி பேக்லைட் (LED Backlight) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஜியோ ஓஎஸ் (JioOS) கொண்ட ஆக்ட கோர் மீடியாடெக் எம்டி 8788 (Octa Core Mediatek MT 8788) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 64 பிட் (64 bit) சப்போர்ட் கொண்டது.

அதோடு ஆர்ம் மாலி ஜி72 (ARM Mali G72 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி இன்டிகேட்டருடன் 2 எம்பி எச்டி கேமரா வருகிறது. டூயல் பேண்ட் வைபை 802.11, 4ஜி சிம் எல்இடி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வருகிறது.

2 யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் எம்இஎம்எஸ் டிஜிட்டல் மைக் (Dual MEMS Digital Mic) வருகிறது. 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 8 மணி நேரம் பேக்கப் கிடைக்கும். இந்த லேப்டாப் பேட்டரி உடன் சேர்த்து 990 கிராம் எடைக் கொண்டுள்ளது. ஜியோ ப்ளூ (Jio Blue) கலரில் விற்பனைக்கு வருகிறது.

லேப்டாப்புக்கு ஒரு வருட வாரண்ட்டியும், சார்ஜருக்கு 6 மாத வாரண்டியும் வருகிறது. இந்த ஜியோபுக் லேப்டாப்பின் விலை ரூ.16,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒரு பட்ஜெட் போன் வாங்கும் விலைக்கு லேப்டாப்பே விற்பனைக்கு வருவது, இதுவே முதல் முறையாகும்.

இதனால், விற்பனையில் மிகப்பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment