Join THAMIZHKADAL WhatsApp Groups
பன்னிரண்டாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம்.
அதனை எப்படி பெறுவது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம். விரைவில் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழை எளிய மாணவர்கள், தங்களின் உயர்படிப்புகளுக்கான தினசரி செலவுகளுக்காக மத்திய அரசுஉதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
மாநில அளவில் நடக்கும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிப்ளோமா அல்லது தொலைதூர கல்வி மூலம் உயர்கல்வி பயில்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையங்கள், தேசிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களாக இருக்க வேண்டும். வேறு எந்த உதவித் தொகையும், அதாவது மாநில அளவிலான உதவித்தொகையை பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப வருமானம் 4.5 லட்சத்திற்குள்ளாகவே இருக்க வேண்டும் என்றும் அதற்கான வருமான சான்றிதழை இணைத்திடுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகையை பெறும் மாணவர்கள், தாங்கள் பயிலும் கல்லூரி அல்லது நிறுவனங்களை மாற்றிக்கொள்ள அனுமதிப்பார்கள்.
மாணவர்கள் தங்களுடைய உதவித்தொகை கோரலை, வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளில் குறைந்தது 50% மதிப்பெண்களும், 75% வருகை புரிதலும் அவசியம் இருக்க வேண்டும். கல்லூரியில் எந்த விதமான ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இளநிலை கல்விக்கு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் மட்டுமே முதுகலை பயிலும்போது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
சரி, கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
1. மதிப்பெண் சான்றிதழ்
2. ஆதார் கார்டு
3. Bonafide சான்றிதழ்
4. வகுப்பு சான்றிதழ்
5. வருமான சான்றிதழ்
6. பாஸ்போர்ட் அளவு போட்டோ
விண்ணப்பிக்கும் முறை என்ன: கல்வி உதவித்தொகையை பெற கண்டிப்பாக நீங்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
National Scholarship Portal: Home https://scholarships.gov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அரசின் அறிவிப்பிற்கு பிறகே விண்ணப்பிக்க முடியும். இந்த Scholarship மூலம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி உதவித்தொகை பெற முடியும். அது எப்படி என்பதையும் பார்க்கலாம். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு என நான்கு வருடங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்ட. இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஆண்டிற்கு ரூ. 12,000 என நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 48,000 உதவித் தொகை கிடைக்கும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே 9 முதல் 12 வகுப்புகள் வரை கல்வியைத் தொடர்ந்தால் தான் இந்த மாதம் ஆயிரம் உதவி தொகை கிடைக்கும். தனியார் பள்ளிகளில் சேர்ந்தால் இந்த உதவி தொகை கிடைக்காது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
9 முதல் 12 வகுப்பு வரை தேர்ச்சி அடையாமலோ இருக்கக்கூடாது. மத்திய அரசின் வேறு எந்த உதவித்தொகையும் பெறுபவராக இருக்கக்கூடாது. தனக்கென வங்கிக்கணக்கு எண், ஆதார் அட்டை, பெற்றோரின் அலைபேசி எண் போன்றவை வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி தொகை குறித்த அறிவிப்பு பெற்றோரின் அலைபேசி எண்ணிற்கு OTP அல்லது குறுஞ்செய்திகள் வரும் என்பதால் தன் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள காலத்தில் அந்த அலைபேசி எண்ணை அவசியம் பராமரிக்க வேண்டும். உதவித்தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.
ஆதார் அட்டையில் உள்ள பெயரும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSPPortal) ஒன்பதாம் வகுப்பில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது உள்ள பெயரும் பொருந்தியிருப்பது அவசியம் ஆகும். . தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியான உடன் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment