Join THAMIZHKADAL WhatsApp Groups
அழகு, காதல், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக இருக்கும் சுக்கிரன் கடந்த ஜூலை 7 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சூரியனின் சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியானார்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி வரை சுக்கிரன் சிம்ம ராசியில் நீடிக்க உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளில் காணப்படும். அது, சுப பலன்களாகவும் இருக்கலாம் அல்லது அசுப பலன்களாகவும் இருக்கலாம். இதில் முக்கியமாக இந்த 3 ராசியினருக்கு ஆகஸ்ட் 7ம் தேதி வரை பணம், வீடு , வாகனம் என அனைத்து வந்து சேரும். அந்த ராசியினர் யார் என்று இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.
கும்பம் : சுக்கிரனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய பண பலத்தை கொண்டுவரப் போகிறது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை உங்களுக்கு வருமான அதிகரிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும். கும்ப ராசியினரின் நிதி நிலை உயர்வதால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதுவரை தள்ளி போன காரியங்கள் அனைத்தும் உடனே நடக்கும்.
மிதுனம் : மிதுன ராசியின் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இந்த ராசியின் ஐந்தாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதி சுக்கிரன். குழந்தை மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.இதன் விளைவாக, நீங்கள் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக காதல் விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள், அதிலும் தொழிலதிபர்களுக்கு நல்ல நேரம். வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். வணிகம் மேம்படும். அதனால் அதிகமான செல்வத்தைப் பெறுவீர்கள்.
துலாம் : சுக்கிரனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வருமானத்திற்கான ஆதாரம் உருவாகும். இந்த நேரத்தில் பழைய முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும். திருமணம் கைக்கூடும்.காதலில் வெற்றி அடைவீர்கள்
No comments:
Post a Comment