Join THAMIZHKADAL WhatsApp Groups
ராகு பகவான் அள்ளித்தரப்போகிறார் மலையாக செல்வம் சேரப்போகிறது கடன் பிரச்சினைகள் தீரப்போகிறது.
பகையெல்லாம் நட்பாகும். உறவுகள் வீடு தேடி வரும். கடகர ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வரும் ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டில் ராகு பயணம் செய்யப்போகிறார். 3ஆம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கேது பயணம் செய்யப்போகிறார். வெற்றிகரமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள். அன்பானவர்கள், எதற்கும் அசராதவர்கள் நீங்கள். உங்களுக்கு அஷ்டமத்து சனி காலம் என்றாலும் குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கின்றனர். ராகுவும் கேதுவும் அற்புதமான பலன்களைத் தரப்போகின்றனர்.
வெற்றிகள் தேடி வரும்: பாக்ய ஸ்தான ராகு முயற்சி ஸ்தான கேது உங்களுக்கு வெற்றிகளையும் தேடி தரப்போகிறது. பொற்காலம்தான் உங்களுக்கு. காரணம் ராகு கேது 3,6,11ஆம் இடங்களில் அமர்வது சிறப்பு. சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வெற்றியை தேடி தரப்போகிறது. சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வாழ்க்கையில் வளர்ச்சிகள் தேடி வரப்போகிறது.
ஜாக்பாட்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல காலம்தான். கடன் பிரச்சனைகள் நீங்கும். சொத்து சேர்க்கை ஏற்படப்போகிறது. வருமானம் அதிகரிக்கும் கடன்கள் அடைபடும். ராகு பகவான் திடீர் ஜாக்பாட்டை அள்ளித்தரப்போகிறார். நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. நெருக்கம் அதிகரிக்கும். விவாகரத்துக்காக கோர்ட் படியேறியவர்கள் கூட இணக்கமாகப்போகிறீர்கள்.
சொந்த வீடு யோகம்: இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நல்ல காலம் தேடி வரப்போகிறது. சிக்கல்கள் நீங்கப்போகிறது. வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு எதிராக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பொற்காலமாக மாறப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நோய்கள் நீங்கும் உடல் நிலை சீராகும். பகை விலகும் பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
பகை நட்பாகும்: அப்பா வழி உறவினர்கள் உதவி செய்வார்கள். சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் தேடி வரப்போகிறது. புது வாகனம் வாங்கப்போவீர்கள். நல்ல காலம் பிறந்து விட்டது என்று பாடப்போகிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. திறமை பளிச்சிடும். உயர்கல்வியில் மேன்மையடைவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான காலநேரம் கைகூடி வரப்போகிறது. விசா கிடைக்கும். உறவும் நட்பும் தேடி வரப்போகிறது.
நிம்மதியான காலம்: அஷ்டமத்து சனி காலமாக உள்ள இந்த கால கட்டத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரப்போகிறது. வாழ்க்கையில் விடியல் வரப்போகிறது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் பெற்று கடனாக கொடுக்காதீர்கள். நல்ல வேலை கிடைக்கப்போகிறது. கை நிறைய சம்பளம் வாங்குவீர்கள். குரு பகவான் தொழில் வியாபாரத்தில் லாபத்தை தரப்போகிறார். திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும், புதன்கிழமையன்று கீழ்பெரும்பள்ளம் சென்று கேது பகவானையும் வழிபடுங்கள். ஸ்ரீகாளஹஸ்தி சென்று பாதாள விநாயகரை வழிபடுங்கள் வெற்றிகள் தேடி தரப்போகிறது.
No comments:
Post a Comment