Join THAMIZHKADAL WhatsApp Groups
ராகு பகவான் கோடி கோடியாக குபேர யோகத்தை அள்ளித்தரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்கள் வீட்டில் மலையாக செல்வம் சேரப்போகிறது மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வரும் ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது. சிம்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் கேதுவும் 8ஆம் வீட்டிற்கு ராகு பகவான் பயணம் செய்யப்போகிறார். ராகுவின் அஷ்டம ஸ்தான பயணம் மிகச்சிறந்த புத்திர பாக்கியத்தை தரப்போகிறது. குருவின் வீட்டில் ராகு அமர்ந்து பயணம் செய்வதால் குரு பகவானைப் போல ராகு செயல்படுவார். சத்புத்திர பாக்கியம் அமையும். பிள்ளைகளுக்கு சுகமான வாழ்க்கை அமையப்போகிறது. யோகமான கால கட்டமாக உள்ளது.
மகிழ்ச்சி தரும் ராகு: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பார்வை வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கிடைக்கிறது. பல சிக்கல்களை சந்தித்து வந்த உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் தரப்போகிறது. செல்வ வளம் வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பிசினஸ் செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு நகை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நகை பணத்தை பத்திரப்படுத்துங்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது.
கேது தரும் யோகம்: இரண்டாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். தன ஸ்தானம் சிறப்பாக அமைந்துள்ளது. எல்லையில்லாத அபரிமிதமான பண வருமானத்தை தரப்போகிறது. நாள்தோறும் விநாயகரை வழிபட வேண்டும். வியாபாரம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரப்போகிறது. பயம் பதற்றம் நீங்கப்போகிறது. நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வீடு கட்ட,பிசினஸ் செய்ய வங்கிக்கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு மிக அற்புதமான கால கட்டம்.
திருமண யோகம்: திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீக்கும். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு வரன் பேசி முடிக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறும். பேச்சில் கவனம் தேவை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே பேச்சை குறைத்து செயலில் கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் பாம்பு கிரகம் அமரும் போது கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும் கவனம்.
வீடு கட்டும் யோகம்: கேது பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டின் மீது விழுகிறது. சுக ஸ்தானத்தில் கேதுவின் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகம் வரும். எட்டாம் வீட்டின் மீது கேதுவின் பார்வை விழுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும். அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றாலும் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை.
வெளிநாட்டு யோகம்: மாணவர்கள் தினசரியும் விநாயகரை கும்பிட்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று படிக்க யோகம் வரும். தடைகள் நீங்கி விசா கிடைக்கும். ஆன்மீக பேச்சாளர்களுக்கு இது அற்புதமான காலகட்டம். பேச்சினால் வருமானம் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு கேதுவினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும். அடிக்கடி மவுன விரதம் இருப்பது நன்மையை கொடுக்கும். புதன்கிழமைகளில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று துளசி வழிபாடு செய்வது நல்லது. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி செல்வ செழிப்பையும் குபேரனாக்கும் யோகத்தையும் தரப்போகிறது.
No comments:
Post a Comment