Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு அளிக்கபப்ட்டுள்ளது. சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை ஆணையிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள், துணைப் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரிடம் வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; 17.07.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றம் W.P. Nos.2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No.3683 of 2020 Dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரான போது சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.
அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)ல் அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உட்பிரிவு 73X(a)ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து” சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர்கள்(தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவர்/மனைவி, மகன், மகள் மற்றும் கணவர்/மனைவி-ன் தாய் தந்தை மற்றும் சகோதரர் சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண்(PAN) இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர்கள்/துணைப்பதிவுத்துறை தலைவர்கள்! பதிவுத்துறை தலைவரிடம் 25.07.2023க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Tuesday, July 18, 2023
Home
பொதுச் செய்திகள்
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் தங்களது சொத்து விவரங்களை 25.07.2023க்குள் தாக்கல் செய்ய உத்தரவு!
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் தங்களது சொத்து விவரங்களை 25.07.2023க்குள் தாக்கல் செய்ய உத்தரவு!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment