Join THAMIZHKADAL WhatsApp Groups
:''இந்த ஆண்டு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்க உள்ளது,'' என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் காலியாக இருந்த 4308 டாக்டர் பணியிடங்களில், பாதி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
983 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்களுக்கு எம்.ஆர்.பி., மூலம் நேர்காணலுக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்க உள்ளது.தமிழகத்திலேயே புதுக்கோட்டையில் உள்ள 2வது அரசு பல் மருத்துவக்கல்லுாரியில் இந்த ஆண்டு, 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது, என்று கூறினார்.
No comments:
Post a Comment