Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநிலங்களில் உள்ள துறைகளில் பெண்களுக்கு முழுமையான அதிகாரமளிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதே மாநில/ மாவட்ட பெண்கள் வள மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வள மையங்கள் மூலமாக அரசு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பிற துறையினரை சிறப்பாக ஒருங்கிணைத்து பாலின உணர்வுத் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் நல திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த வள மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.
மாநில வள மையத்தில் உள்ள காலியிடங்கள் விவரம்:
மாநில அளவில் பெண்களை மையமாக வைத்து செயல்படும் மாநில வள மையத்தில் 8 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மாவட்ட வள மையங்களில் உள்ள காலியிடங்கள்: ஒவ்வொரு மாவட்ட பெண்கள் வள மையத்திலும் தலா 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, மொத்தம் மாவட்ட அளவில் 266 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tnsw.in என்ற இதற்கான விண்ணப்பங்களை tnsw.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2023 ஆகும்.
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment