வாரத்தில் 5 நாள் வேலை செய்வது தொடர்பான வங்கி தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்த வார இறுதியில் நிறைவேறும் என்பதால், வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில், இந்திய வங்கி சங்கம் (ஐபிஏ) மற்றும் யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் (யுஎஃப்பியு) இடையே இந்த விவகாரம் விவாதத்திற்கு வரும்.
5 நாள் வேலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளின் தேவை போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படும். ஊழியர்களுக்கு 2 நாள் வார விடுமுறை கிடைக்கும். CNBC படி, ஜூலை 19 தேதியிட்ட அறிவிப்பில், UFBU 5 நாள் வேலை ஊழியர்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள உதவும் எனக் கூறப்பட்டிருந்தது.
"இந்தப் பிரச்னை பல்வேறு பங்குதாரர்களின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும், தாமதமின்றி வாரத்திற்கு 5 வங்கி நாட்கள் அறிமுகப்படுத்தப்படும் வகையில் அதை விரைவுபடுத்துமாறு ஐபிஏவிடம் கேட்டுக் கொண்டோம்" என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசின் நிலைப்பாடு
இது தொடர்பாக ஐபிஏ முன்மொழிவுக்கு பதிலளித்த நிதி அமைச்சகம், வங்கி ஊழியர்களின் இந்த கோரிக்கையை ஆட்சேபிக்க மாட்டோம் என்று தெரிவித்ததாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது. அதோடு ஒவ்வொரு வேலை நாளிலும், வழக்கமான நேரத்தை விட 40 நிமிடங்கள் வங்கி மேலும் திறந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
வங்கியில் தற்போதைய விடுமுறை முறை
தற்போது, வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், பண்டிகைகளில் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும், மேலும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலைத் தயாரிக்கிறது. இருப்பினும், ஆன்லைன் சேவைகள் விடுமுறை நாட்களிலும் செயல்படும்.
No comments:
Post a Comment