Join THAMIZHKADAL WhatsApp Groups
தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று கூறுகின்றனர்.
மேற்கண்ட குறைபாடுகள் உங்களுக்கு இருக்குமேயானால் நிச்சயமாக நீங்கள் மருத்துவரை அணுகி கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. கால்சியம் குறைபாட்டில் மூலம் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதை வருவதற்கு முன்பே தடுக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமை ஆயிற்று.
கால்சியம் குறைபாடு எதனால் ஏற்படுகிறது? ஒஸ்டியோபெனிய என்கிற ஒரு காரணி ஆனது மினரல் அளவை எலும்பிலிருந்து குறைக்கிறது. எலும்பில் உள்ள மினரல் அளவானது குறையும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் வியாதி வருகிறது. இந்த வியாதியானது எலும்பை மிகவும் ஒல்லியாக மாற்றிவிடுகிறது. எலும்பு மிகவும் ஒல்லியாக மாறும்பொழுது சுலபமாக உடைந்து விழுகிறது.
முக்கியமாக நமது எலும்புகளுக்கு அதிக அளவில் கால்சியம் சத்து ஆனது தேவைப்படுகிறது. எனவே கால்சியம் தினமும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தினமும் நாம் கால்சியம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கால்சியம் குறைபாட்டை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய மருத்துவம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு
ஏலக்காய்
தண்ணீர்
நாட்டு சக்கரை
செய்முறை:
1: முதலில் 50 கிராம் கேழ்வரகு எடுத்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும் .பின்பு அதனை ஒரு எட்டு மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2: ஊற வைத்து அந்தக் கேழ்வரகு எடுத்து தண்ணீரை அகற்றிய பின்பு துணியில் அந்தக் கேழ்வரகு போட்டு நன்றாக மூடி ஒரு 48 மணி நேரத்திற்கு அப்படியே வைத்துக் கொள்ளவும். இதன் பெயர் தான் முளை கட்டுதல்.
3: முளைகட்டி வைத்த கேழ்வரகு எடுத்து நன்றாக அலசி தண்ணீரை அகற்றிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் அதனை சேர்த்து வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
4: பின்பு அதனை நன்றாக வடிகட்டி அதில் உள்ள பாலை எடுத்துக் கொள்ளவும்.
5: வடிகட்டிய பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் அந்த பாலுக்கு சமமான தண்ணீர் சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடம் கைவிடாமல் கலக்கிக் கொள்ள வேண்டும். கைவிடாமல் கலக்காமல் இருந்தால் அது கெட்டி பதத்திற்கு வந்து விடும் அப்படி விடக்கூடாது.
6: பின்பு அதனை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேவையான அளவு நாட்டுச்சக்கரை சேர்த்து மற்றும் தேவையானால் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து குடித்து வந்தால் போதும்.
இதனை அனைவரும் குடிக்கலாம் ஆனால் இரவு தூங்கும் முன்பு இதனை குடிக்க கூடாது ஒரு ஐந்து மணிக்குள் இதனை குடித்து விட வேண்டும்.
தாய்ப்பாலுக்கு நிகராமல் இருப்பது ராகி பால்தான் எனவே இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து தினமும் குடித்து வந்தால் கால்சியம் குறைபாடு என்பது ஏற்படாது.
அந்த காலத்தில் எந்த ஒரு நோய் இல்லாமல் அதாவது சர்க்கரை நோய் மூட்டு வலி கை கால் வலி இது போன்ற எந்த ஒரு நோய்களும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் வாரத்தில் இரண்டு முறை அவர்கள் இந்த ராகி பாலை குடித்து வந்ததனால் தான்.
எனவே நாம் இந்த ராகி பாலை தினமும் எடுத்து வந்தால் நம் உடலில் உள்ள கால்சியம் குறைபாடு இருக்கவே இருக்காது.
No comments:
Post a Comment