Join THAMIZHKADAL WhatsApp Groups
நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும்.
டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாக கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறுகுறியாகவே பார்க்கப்படுகிறது.
கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம்.
ஒவ்வொருவருக்கும் இதில் சில அறிகுறிகளோ, பல அறிகுறிகளோ அல்லது வேறு சில அறிகுறிகளோ கூட இருக்கலாம்.எனவே இந்த சக்கரை நோயை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை
வேப்ப இலை
செய்முறை:
1: முதலில் மூன்று வெற்றிலை மற்றும் இரண்டு கொத்து வேப்ப இலை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2: பின்பு ஒரு பாத்திரத்தில் வெற்றிலை எடுத்து அதன் காம்புகளை நீக்கி விட்டு மூன்று துண்டுகளாக சேர்த்து மற்றும் மூன்று கொத்து வேப்பிலையை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
3: பின்பு அதனை வடிகட்டி குடித்து வந்தால் போதும்.
இதனை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இதனை குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மதியம் குடிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் நிச்சயமாக நல்ல ஒரு ரிசல்ட் தெரியும். இதில் எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது.
நம் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும். இதில் பயன்படுத்தி இருக்கும் வேப்பிலை நம் வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
இதனை சக்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் குடிக்க வேண்டாம். அனைவரும் குடிக்கலாம் ஏனென்றால் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வராமல் இருக்க பாதுகாப்பை இருக்கலாம்.
எனவே இதனை பயன்படுத்தி வந்தால் நம் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
No comments:
Post a Comment