Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 29, 2023

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தில் 4,062 பணியிடங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதற்கு விண்ணப்பிக வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

பணியிட விவரம்:பள்ளி முதல்வர் -303
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - 2266
கணக்கர் -361
இளநிலை உதவியாளர் (தலைமையகம்)- 759
ஆய்வக உதவியாளர்- 373

மொத்த பணியிடங்கள் - 4062

ஊதிய விவரம்:பள்ளி முதல்வர் - ரூ.78,800 –2,09,200/-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - ரூ. 47,600-1,51,100/-
கணக்கர் – ரூ. 35,400-1,12,400/-
இளநிலை உதவியாளர் (தலைமையகம்) – ரூ. 19,900-63,200/-
ஆய்வக உதவியாளர- ரூ.18,000-56,900/-

கல்வித் தகுதி:இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி முதல்வர் பணிக்கு 12 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
PGT - ஆசிரியர்கள் பணிக்கு ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல்,விலங்கியல்,தாவரவியல்,வரலாறு, வணிகவியல், ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பள்ளி முதல்வர் பதவிக்கு ரூ- 2000/- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ. 1500/- ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்,

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

www.emrs.tribal.gov.in-என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளி:

பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275 (1)-ன் கீழ் மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.

2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி- 31.07.2023

இது குறித்து கூடுதல் தகவல்களை https://emrs.tribal.gov.in/backend/web/site/Information-Bulletin.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News