Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 24, 2023

முறைகேடாக பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்! வட்டாட்சியர்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவு..

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முறைகேடாக பதவி உயர்வு பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட 45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் 2014 முதல் 2019 வரை நடைபெற்ற வட்டாட்சியர் பதவி உயர்வு நடவடிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வு பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர் இடம்பெறவில்லை என்றும் முறையிடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

முறைகேடாக பதவி உயர்வு பெற்ற துணை ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நீதிமன்ற உத்தரவின் படி 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “மாண்பமை உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்புரை வழங்கியது.

மாண்பமை உச்சநீதிமன்ற வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ஆம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News