Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 13, 2023

553 குரூப் 'ஏ' காலிப்பணியிடங்கள் - மத்திய அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
காப்புரிமை வடிவமைப்புகள் பணிகளில் அடங்கிய குரூப் -A நிலை பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை காப்புரிமை வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (Office of Controller General of Patents Designs and Trademarks) வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்: 553


கல்வித்தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் தொடர்புடைய துறைகளில் இளநிலை மற்றும் (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது ஆகஸ்ட் 4ம் தேதி அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, பேப்பர் பேனா அடிப்டையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் தேர்வு முறை நடைபெறும். முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.500 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த பதவிக்கு www.qcin.org என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த மேற்படி விவரங்களை தெரிந்து கொள்ள RECRUITMENT NOTIFICATION FOR 553 POSTS OF EXAMINER OF PATENTS & DESIGNS GROUP-A இணைப்பைக் கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News