Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 4, 2023

மொபைல் தண்ணீரில் விழுந்தால்.. செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! அரிசியில் போடுவது ஒர்க்அவுட் ஆகாது மக்களே

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எதிர்பாராத விதமாக மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டது என்றால் பதற வேண்டும். இதில் கூறப்பட்ட விஷயங்களைச் செய்யுங்கள்.

அப்போது உங்களை மொபைலை காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது.

மொபைல் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒரு ஆறாவது விரலைப் போல மாறிவிட்டது என்றே சொல்லலாம். இப்போது கிட்டதட்ட நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் நாம் மொபைலை எடுத்துச் செல்கிறோம்.

அப்படியிருக்கும் பொது உங்கள் மொபைல் தண்ணீர் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா. அரிசியில் போடலாம் என உடனே சொல்லாதீர்கள். மொபைலை போட்டால் செய்ய வேண்டிய 4 விஷயம் செய்யக் கூடாத 3 விஷயங்களைப் பார்க்கலாம்.


சுவிட்ச் ஆப் செய்யுங்கள்: உங்கள் மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் வெளியே எடுத்தவுடன் அதை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். பெரும்பாலும் மொபைல் தானாக ஆப் ஆகிவிடும். அப்படி ஆப் ஆகவில்லை என்றாலும் மொபைலை வெளியே எடுத்தவுடன் சுவிட்ச் ஆப் செய்யுங்கள். இதை மொபைல் உள்ளே இருக்கும் சாதனங்கள் ஷார்ட் ஆகாமல் இருக்கு உதவும். அடுத்து சிம் கார்டை வெளியே எடுங்கள். இது சிம் கார்ட்டை பாதுகாக்க உதவும்.

துடைக்க வேண்டும்: அடுத்து மொபைலில் இருக்கும் நீரைத் துடைக்கவும். காட்டன் துணி அல்லது அதிக நீரை உறிஞ்சும் துணை கொண்டு கொண்டு மொபைலை துடைக்கவும். உள்ளே இருக்கும் நீரை நம்மால் நீக்க முடியாது. சிலர் ஹேர் ட்ரையரை பயன்படுத்தச் சொல்வார்கள். இருப்பினும் தப்பித் தவறிக் கூட அதைச் செய்யாதீர்கள். டிரையரில் இருந்து வரும் காற்று மிகவும் சூடாக இருக்கும் என்பதால் அது உள்ளே இருக்கும் சிறு மின் இணைப்புகளைச் சேதப்படுத்தப்படும்.

சார்ஜ் போடாதீர்கள்: முன்பே சொல்லியது போல மொபைல் நீரில் விழுந்தவுடன் ஸ்டவிட்ச் ஆப் ஆகிவிடும். சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகியிருக்கும் என நினைத்து சார்ஜ் போடாதீர்கள். உள்ளே நீர் இருக்கும் போது சார்ஜ் போட்டால் அதை மொபைலை முற்றிலுமாக பாதிக்கும். சிலர் நீரை வெளியேற்றுகிறேன் என்ற பெயரில் சாவி, காது குடையும் பட்ஸ் என எல்லாவற்றையும் மொபைலில் செருகுவார்கள். இவை மொபைலை மேலும் மேலும் தான் மோசமான நிலைக்குத் தள்ளும். என்பதால் இதையும் செய்யாதீர்கள்.

ஷேக் செய்யுங்கள்: சார்ஜர் மட்டுமின்றி ஹெட்போன் உள்ளிட்ட எந்தவொரு சாதத்தையும் இப்போது இணைக்கக் கூடாது. மேலும், உள்ளே இருக்கும் நீரை வெளியேற்ற மெல்ல மொபைலை ஆட்டவும் மொபைலை shake செய்வதன் மூலம் ஓரளவுக்கு நீரை வெளியேற்றலாம்.

அரிசி மூட்டை பயன் தராது: பெரும்பாலானோர் மொபைலை அரிசி மூட்டையில் போட்டு வைக்கச் சொல்வார்கள். அது நீரை உரிஞ்சும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், மொபைலை அரிசியில் போட்டு வைப்பதால் ஈரத்தன்மை குறையும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, அரிசியில் போட்டு வைப்பதால் எந்தவொரு பயனும் இல்லை என்றே தி கார்டியன் குறிப்பிடுகிறது.

வெயில் படாத இடத்தில் வைக்கவும்: தப்பித் தவறியும் நேரடியான சூரிய ஒளியிலோ வைக்கக் கூடாது. நீரை ஆக்குகிறேன் என்று சூடான எந்தவொரு பொருள் அருகிலும் வைக்காதீர்கள். உங்களை மொபைலை அடுத்துக் கொஞ்ச நேரம் காய்ந்த அதே நேரம் வெயில் படாத இடங்களில் வைக்கவும். அதன் பின்னர் எடுத்து ஆன் செய்து பாருங்கள். மொபைலில் அதிகமாகத் தண்ணீர் போகவில்லை என்றால் இவை செய்தாலே போன் ஆன் ஆகி வழக்கம் போல ஒர்க் ஆகும்.

பொய் சொன்னால் பலன் இல்லை: அதேநேரம் இவை அத்தனையும் செய்தும் மொபைல் ஆன் ஆகவில்லை என்றால் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள். பெரும்பாலான மொபைல்களுக்கு நீரில் போட்டால் வாரண்டி இருக்காது. வாரண்டி பெற வேண்டும் என்பதற்காகத் தண்ணீரில் போடவில்லை எனப் பொய் சொல்லாதீர்கள்.

இப்போது வரும் அனைத்து மொபைல்களிலும் "இம்மர்ஷன் சென்சார்கள்" உள்ளன. நீர் உள்ளிட்ட எந்தவொரு திரவம் இதில் பட்டாலும் கலர் மாறிவிடும். இதை வைத்தே நீங்கள் பொய் சொல்வதை அவர்கள் ஈஸியாக கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே, இதைச் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News