Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள துணை மருத்துவ படிப்புகளில் சேர, 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள, 13,000க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்களுக்கு, 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறுகையில், 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும், 16ல் வெளியிடப்பட்டு, அடுத்த நாள் முதல் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment