Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 7, 2023

வெறும் 6 நாள்களில் சிறுநீரக கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சிறுநீரக கல் பிரச்னையை போக்க கூடிய ஒரு சில உணவு வகைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பீன்ஸ்:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் கால் கிலோ பீன்ஸ் (ஃபிரஞ்சு பீன்ஸ்) வாங்கி, விதை மற்றும் நார் நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து குடிக்க வேண்டும்.

குடித்து 10 நிமிடம் கழித்து 2 லிட்டர் நீரை சிறிது இடைவெளி விட்டு குடிக்க வேண்டும். இன்னும் அதிகமான நீரை குடிக்க முடிந்தால் குடிக்கலாம். அப்படி நாம் குடிக்கும் போது கல் உடைந்து கண்டிப்பாக நீரில் வெளியாகிவிடும்.

திராட்சை:
திராட்சை பழத்தில் உள்ள நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்கும். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

மாதுளம் பழம்:
மாதுளம் பழத்தின் சாறை பிழிந்து ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், கல் பிரச்சினை தீரும்.

அத்திப்பழம்:
கொதிக்க வைத்த அத்தி பழச்சாற்றை வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து காலையில் காலி வயிற்றில் பருகினால் பலன் கிடைக்கும்.

துளசி இலை:
துளசி இலையின் சாருடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம். நம் உடலில் கல் உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கைக்காக இதை அருந்தலாம். கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம் ஆகும்.

தண்ணீர்பழம்:
நீரின் அளவு அதிகம் உள்ள பழத்தில் பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம். ஆகவே தண்ணீர்பழம் அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.

ஆப்பிள்:
ஆப்பிள் அனுதினமும் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அடிக்கடி ஆப்பிள் சாப்பிட்டால் கல் உருவாகாமல் தடுக்கலாம்.

வாழைத்தண்டு ஜூஸ்:
நாம் அடிக்கடி வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் வாழைத்தண்டு பொரியல் சாப்பிட்டு வந்தால் கல் உருவாவதை தடுக்கலாம் மற்றும் கல் உருவானதை உடைக்கவும் செய்யலாம்.

இளநீர்:
தினமும் இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொண்டாலும் கல் உருவாவதை தடுக்கலாம். மேலும் குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை அதிகரித்தால் கல் உருவாவதை தடுக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News