Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 16, 2023

தரவரிசைப் பட்டியில் 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேலம் மாணவி கிருத்திகா முதலிடம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சேலம் மாணவி கிருத்திகா சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியில் 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேலத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் சாதனை படைத்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி கிருத்திகா, கடந்த முறை நீட் தேர்வில் இடம் கிடைக்காத நிலையில் ஒராண்டுக்குப் பின் மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதியதில் அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அர்ச்சனா 537 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 6-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அரசு ஒதுக்கீட்டிலும் சேலம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சேலம் சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர் வருண் 715 மதிப்பெண்களுடன் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், அதே பள்ளி மாணவர் கவியரசு 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவியருக்கு அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News