Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 18, 2023

இப்படி தண்ணீர் குடித்தால் 90% நோயிலிருந்து நமது உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்..!

1. காலையில் எழுந்ததும் வாய் கொப்புளித்து விட்டு ஒரு கப் தண்ணீர் அருந்தினால், உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.

2. உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன் இரண்டு கப் தண்ணீர் குடிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும்.

3. குளிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னதாக ஒரு கப் தண்ணீர் குடித்து விட்டு குளித்தால், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். அதாவது இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.

4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வெளியிலிருந்து வீட்டிற்கு வந்த உடனேயும் ஒரு கப் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

5. மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு ஒரு டம்ப்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

6. அதிகமாக சாப்பிட்டாலும், உடல் எடை குறைய வேண்டுமென்றால் சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ப்ளர் தண்ணீர் குடித்தாலே, நன்கு செரிமானமாகும். மலசிக்கல் பிரச்சினை இருக்காது. உடல் எடை குறையும்.

7. உறங்க செல்லும் முன் ஒரு டம்ப்ளர் தண்ணீர் அருந்தினால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.

இப்படி தினமும் கடைபிடித்தால் 90% நோயிலிருந்து நமது உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

குறிப்பு

தண்ணீர் அதிகமாக அருந்துவது உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் தாகம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது. நாம் அதிகமாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக நம் உடல் உழைப்பும் இருக்க வேண்டும். பொதுவாக நாம் அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment