பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை கேட்கக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை கேட்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்த மாணவரின் ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில், இதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் நேரு தாஸ் என்பவர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அண்மையில் புகார் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: பாலியல் புகார்: முன்னாள் டிஜிபியின் மேல்முறையீட்டு மனு ஜூலை 19-ல் விசாரணை இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை குறிப்பிடுவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment