Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது இருக்கும் நிலைமையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் வேலையை செய்கிறார்கள்.
அந்த காலத்தில் பெரியவர்கள் மட்டுமே கண்ணு தெரியவில்லை என்று கண்ணாடியை பயன்படுத்துவர் ஆனால் தற்போது இருக்கின்ற நிலைமையோ 5 வயது குழந்தை முதல் கண்ணாடி போட்டு தான் பார்க்கின்றனர்.
கண்பார்வை பிரச்சனைக்கு காரணம் நம்மை சுற்றி இருக்கக்கூடிய சுற்றுச்சூழல்தான் அதிகமாக மொபைல் போனை பார்ப்பது தொலைக்காட்சி அதிகமாக பார்ப்பது இரவு தூங்குவதற்கு முன்பாக இருட்டில் மொபைல் போனை பார்ப்பது போன்றவற்றால் கண் பார்வை பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் உடம்பிற்கு தேவையான சரியான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் இது போன்ற கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் பிரச்சனைகள் ஏற்படலாம். இதுபோன்ற கண்பார்வை பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
செய்முறை:
இதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது தான்றிக்காய். இந்த தான்றிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தான்றிக்காயில் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு மேலே இருக்கக் கூடிய தோல்களை பவுடர் ஆக்கி தான் இந்த செய்முறையை செய்யப் போகிறோம். தான்றிக்காய் பவுடராக கிடைத்தாலும் அதை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது ஒரு டம்ளரில் 200 மில்லி லிட்டர் தண்ணீரில் 5 கிராம் அளவு இந்த தான்றிக்காய் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் தீரும். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இருக்கக்கூடிய கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
சில பேருக்கு பார்வை மங்குதல் பிரச்சனை இருக்கும் அவர்களும் இதை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர பார்வை மங்கள் பிரச்சனை தீரும். இவ்வாறு தண்ணீரில் இந்த தான்றிக்காய் பொடியை கலந்து 21 நாட்களுக்கு தினமும் தவறாமல் குடித்து வர வேண்டும்.
No comments:
Post a Comment