Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 28, 2023

சிறியவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிரச்சனையாக இருக்கும் குடல் புழுக்களுக்கு சிறந்த தீர்வு குப்பை மேனி..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள இரத்தமும் சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இரதம் அசுத்தமனால் பல உடல் நல குறைபாடுகள் ஏற்படும்.

அதாவது முகப்பரு, அலர்ச்சி, மஞ்சள் காமாலை, தலைவலி, உடல் எரிச்சல்,கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, முடி உதிர்தல், உடல் சோர்வு மற்றும் தோல் சுருக்கம் போன்றவை ஏற்பட இரத்த சுத்தமின்மையும் ஒரு காரணம் ஆகும்.

இரத்தம் சுத்தமாக இருப்பது மிக மிக அவசியம் இரத்தத்தை சுத்தமாக்கி உடலை பலமாக்கும் மூலிகை தான் இந்த குப்பை மேனி செடி இலை.

பயன்படுத்தும் முறை:

குப்பைமேனி செடி ஒன்றை வேருடன் பிடுங்கி நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு அதனுடன் ஏழு(07) மிளகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வந்தால் இரதம் சுத்தம் ஆகி இரத்த ஓட்டமும் சீராகும்.

குடல் புழுக்கள்

சிறியவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிரச்சனையாக இருக்கும் குடல் புழுக்களுக்கு சிறந்த தீர்வு குப்பை மேனி.

பயன்படுத்தும் முறை:

வேருடன் குப்பைமேனி செடியை பிடுங்கி நீரினால் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து கசாயம் போன்று செய்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறி விடும்.

சுவாசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை

குப்பைமேனி இலை சாற்றை காச்சிய பாலில் கலந்து குடித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்குவதுடன் மலச்சிக்கலும் நீங்கும்.

தோல் நோய்கள்

அனைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு குப்பைமேனி இலை சிறந்த தீர்வாகும்.தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் காயங்கள், தீ புண்கள் கூட ஆறும். அதே போன்று உடலில் ஏதாவது புண்கள் இருந்தால் வெண்ணீரில் குப்பைமேனி இலைகளை போட்டு வெண்ணீர் ஆறிய பின் குளித்து வந்தால் உடலில் உள்ள புண்கள் மறையும்.அதே போன்று குப்பைமேனிஇலை சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து பூசினால் படர்தாமரை, சொறி, சிரங்கு மற்றும் பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.படுக்கை புண் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை விளக்குஎண்ணையில் சேர்த்து காய்ச்சி படுக்கை புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் படுக்கை புண் ஆறும்.

பத்து குப்பைமேனி இலைகளை பசும்பாலில் சேர்த்து வேகவைத்து குடித்து வந்தால் உடல் அழகும் ஆரோக்கியமும் பெரும்.

சளி உள்ளவர்கள் குப்பைமேனி இலைகளை தண்ணீரில் வேகவைத்து கசாயம் போல் குடித்து வந்தால் சளி இருமல் கட்டுப்படும்.

மூல நோய் உள்ளவர்களுக்கு குப்பைமேனி இல்லை சிறந்த மருந்தாகும்.குப்பைமேனி இலைகளை காய வைத்து நன்றாக காயவைத்து பொடி ஆக்கிக்கொண்டு அதில் சிறிது நெய் சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எல்லா வகை மூலமும் குணமாகும்.

அதே போன்று குப்பைமேனி இலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து மலவாய் வழியாக உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும்.

இதற்கு குப்பைமேனி இலையை மஞ்சலுடன் அரைத்து பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் உதிர்ந்து முகம் பொலிவாக மாறும்.
குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

குப்பைமேனி இலை சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் அருந்துவதால் இரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

குப்பைமேனி சாற்றை வாரத்தில் இரண்டு முறை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News