Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவதில் துடைப்பத்துக்கு முக்கிய பங்கு உண்டு. வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இந்த துடைப்பத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.
லட்சுமி தேவி 108 பொருட்களில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வீடு கூட்ட பயன்படும் துடைப்பம் லட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, துடைப்பத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம் என்று நினைப்பது மிகவும் தவறான செயல். அவ்வாறு வைத்தால் வீட்டின் லட்சுமி கடாட்சம் அகலும் என்பதும் ஐதீகம். அதேசமயம் வீட்டில் நன்மை தரும் விஷயங்களும் அகலும். இதுமட்டுமன்றி வீட்டில் நினைத்த இடத்தில் துடைப்பத்தை வைப்பதால் வறுமை நிலை அதிகரிக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் துடைப்பத்தை எப்போதும் வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். வட கிழக்கில் துடைப்பம் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், வீட்டில் பணத்தை மறைத்து வைப்பதைப் போல துடைப்பத்தையும் எப்போதும் மறைத்து வைக்க வேண்டும்.
பழைய துடைப்பம் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிலவும். அதேபோல் துடைப்பத்தை தலைகீழாக நிற்க வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறையான விளைவுகள் அதிகரிப்பதோடு வீட்டில் பணத்தை துடைத்துவிடுமாம். எனவேதான் துடைப்பத்தை எப்போதும் கால்படாத இடத்தில் படுத்த நிலையில் மறைத்தவாறு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
வீட்டில் பாத்திரம் கழுவும் இடத்திற்கு அருகில் துடைப்பத்தை வைத்துக்கொள்ளலாம். அதேபோல் மின்சார பெட்டி இருக்கும் இடம், வாஷிங் மெஷின் இருக்கும் இடத்திற்கு அருகில் வைக்கலாம் அல்லது கழிவு நீர் செல்லும் வழி அமைந்திருக்கும் இடங்களில் வைக்கலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். எனவே இனி வீடு கூட்ட பயன்படும் இந்த துடைப்பத்தை நினைத்த இடங்களில் வைக்காமல் வாஸ்து சாஸ்திரப்படி முறையான இடங்களில் வைத்துக்கொள்ளுங்கள்
No comments:
Post a Comment