Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 11, 2023

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு ஆன்லைன் விண்ணப்பம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுதல், வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ-சேவைமையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News