Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 29, 2023

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில்50 சதவீத இடங்கள் அகில இந்தியஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துகிறது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ, எம்டிஎஸ் படிப்புகளில் 2023-24-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் கடந்த27-ம் தேதி முதல் நடந்துவருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எஞ்சிய 50சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எம்டிஎஸ் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன் தரவரிசைபட்டியல், https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங் களில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஆக.5-ம் தேதி ஆன்லைனில் தொடங்க உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News