Join THAMIZHKADAL WhatsApp Groups
மனிதர்களின் நடத்தையால் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்களா? ரகசியங்களை யார் மறைக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது எப்படி என அறிய விரும்புகிறீர்களா? பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சக்திவாய்ந்த பேச்சாளராக மாற விரும்புகிறீர்களா? அல்லது எந்த அரசியல்வாதி உண்மையைச் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, ஆட்கள் நிரம்பிய ஒரு அறைக்குள் நீங்கள் சென்றால், அங்கு உட்கார்ந்திருப்பவர்களின் நிலையைப் பார்த்து, அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் அவர்கள் எப்படியானவர்கள் என்பதையும் உங்களால் உணர்ந்துக் கொள்ள முடியும்.
விமானங்களில் உள்ள விமானப் பணியாளர்கள் கணுக்கால் குறுக்காக அமர்ந்திருப்பவர்களை அடையாளம் காண பயிற்சி பெற்றுள்ளனர் என்பதை சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த நபர்கள் பணியாளர்களிடம் சேவையைக் கேட்க, பதட்டத்தை அனுபவிக்கலாம். இந்த பயணிகளை ரிலாக்ஸ் செய்து, ஓய்வெடுக்க உதவுவதற்கு கேபின் ஊழியர்கள் கற்பிக்கப்படுகிறார்கள்.
நமது உடல் மொழி நமக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு என்பது ஒருவரின் உடல் மொழிக்கும் அவர்களின் வார்த்தைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் கண்டறியும் திறனைக் குறிக்கிறது. இந்தக் கட்டுரையில், வெவ்வேறு உட்காரும் நிலைகளை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
நேரான முழங்கால்
நீங்கள் உங்கள் முழங்கால்களை நேராக வைத்து உட்கார்ந்தால், அது நீங்கள் பகுத்தறிவு சிந்தனையாளர் மற்றும் அதி பயங்கர நேர்மையானவர் என்பதை வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஆரோக்கியமான சுய கருத்து மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பீர்கள்.
ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நேர்காணல்களில் முழங்கால்களை நேராக வைத்து உட்கார்ந்திருப்பவர்கள், அவர்கள் விண்ணப்பித்த வேலைப் பணிகளுக்கு மிகவும் தகுதியானவர்கள் என்று உணரப்பட்டது. அவர்கள் தங்கள் மீதும் தங்கள் திறமைகள் மீதும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
உங்களுக்குப் பிடித்தமான உட்காரும் நிலை நேரான முழங்கால்கள் என்றால், நீங்கள் பொதுவாக மிகவும் ரிசர்வ்டாக இருப்பீர்கள். தேவைப்படும்போது மட்டும் பேசுவீர்கள், கிசுகிசுப்பதைத் தவிர்ப்பீர்கள். இருப்பினும், நீங்கள் எல்லா விஷயங்களையும் உங்கள் இதயத்தில் புதைக்க மாட்டீர்கள். நினைப்பதை தவறான எண்ணம் இல்லாமல் நேரான முறையில் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கும் விதத்திலும் நீங்கள் மிகவும் வலிமையானவர்.
முக்கிய குணாதியங்கள்: நேரம் தவறாமை, பகுத்தறிவு சிந்தனையாளர், நேர்மையானவர், அர்ப்பணிப்பு மிக்கவர், ஒழுக்கமானவர், கிசுகிசுக்காத மற்றும் ரிசர்வ்ட் டைப்.
முழங்கால்களுக்கிடையே இடைவெளி
நீங்கள் முழங்கால்களைத் விலக்கி உட்கார்ந்தால், நீங்கள் சுயநலமாக இருக்கலாம். உங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பீர்கள். அகங்காரமானவராக இருக்கலாம். நீங்கள் சுயமரியாதை குறைவாக கொண்டிருப்பீர்கள். அதனால் தான் உங்களைப் பற்றி நன்றாக உணர, முடிந்தவரை அதிக இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த விஷயத்தால் நீங்கள் எளிதில் திசைதிருப்பப்படலாம். பொதுவாக குறைந்த கவனத்தை கொண்டிருப்பீர்கள். அதிகம் கவலைப்படுவீர்கள் ஆனால் வெளியில் காட்டாமல் இருக்கலாம்.
உங்களுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தியான தன்மை வேண்டும். இருப்பினும், மற்றொரு பணிக்கு செல்வதற்கு முன் ஏற்கனவே செய்த வேலையை சரியாக முடிப்பதில் நீங்கள் சிறந்தவர் அல்ல. தொடர்ந்து அதிகமாக சிந்திப்பீர்கள், அல்லது விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்ற பயத்தால் ஆட்கொண்டிருப்பீர்கள். உங்களிடம் நல்ல யோசனைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை வெளிப்படுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கும்.
முக்கிய குணாதிசயங்கள்: சுயநலம், திமிர்பிடித்தல், குறுகிய கவனம் மற்றும் விரைவான சலிப்பு.
கால் மேல் கால்
இந்த நிலையில் அமர்ந்தால், நீங்கள் சிறந்த உரையாடலை கடைப்பிடிப்பீர்கள். நீங்கள் பேசுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். எந்த உரையாடலையும் எளிதாக வழிநடத்தலாம். மிகக் குறைவான ஜட்ஜ்மெண்டல்களைக் கொண்டிருப்பீர்கள். மற்றவர் எதைப் பற்றி பேச முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள்.
நீங்கள் படைப்பாற்றல் நிறைந்தவர். கனவு காண்பவர் மற்றும் அதிக கற்பனை சிந்தனை கொண்டவர். நீங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்ட நபரும் கூட. மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டீர்கள். பொதுவாக உங்கள் எண்ணங்களை உங்களுக்குள் வைத்துக்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒருவரை அனுமதிக்க உங்களுக்கு நிறைய நேரம் ஆகலாம். நீங்கள் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.
எளிதில் நண்பர்களை உருவாக்க மாட்டீர்கள். உங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் கவனம் செலுத்த விரும்புவீர்கள். நீங்கள் நிறைய சுயமாக பிரதிபலிக்கிறீர்கள். வெளி உலகத்தை விட உங்கள் உள் உலகத்தையே நீங்கள் விரும்புவீர்கள்.
முக்கிய ஆளுமைப் பண்புகள்: கலை, கனவு காண்பவர், கற்பனைத்திறன், ரிசர்வ்ட், உணர்திறன், கவனம், உள்நோக்கம், பிரதிபலிப்பு, சுதந்திரமானவர், தன்னம்பிக்கை, நம்பிக்கை மற்றும் கவர்ச்சி.
கணுக்கால் குறுக்காக அமர்வது
இந்த நிலையில் உட்காரும் நபர்கள் down-to-earth, நேர்த்தியான மற்றும் அதிநவீனமானவர். நீங்கள் உற்சாகமூட்டுபவராகவும், ஊக்கமளிப்பவராகவும் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக அயராது உழைப்பீர்கள்.
நீங்கள் பொதுவாக ரிசர்வ்டாக இருக்க விரும்புவீர்கள் அல்லது விரைவாக பேச விரும்புவீர்கள், இருப்பினும் எந்த சூழ்நிலையிலும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும் அசாத்திய திறமையும் உங்களுக்கு உள்ளது. உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் தன்னம்பிக்கையுடன் உணர வைக்கலாம். நீங்கள் பொதுவாக உங்களை அமைதியுடனும், எப்போதாவது பீதியுடனும் வைத்திருப்பீர்கள்.
அவசரப்பட்டு முடிவெடுப்பதற்கும், காரியங்களைச் செய்து முடிப்பதற்கும் நீங்கள் அவசரப்பட மாட்டீர்கள். காரியங்களைச் செய்ய உங்கள் ஆரா மற்றும் இருப்பு போதுமானதாக இருக்கலாம். உங்கள் தோற்றத்திலும் நீங்கள் அதிக அக்கறை காட்டுவீர்கள். சந்தர்ப்பத்திற்கேற்ப உங்களின் வெளிப்புறத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் பாதுகாப்பின்மையை மறைப்பதிலும் நீங்கள் வல்லவர்.
முக்கிய ஆளுமைப் பண்புகள்: ரிசர்வ்ட், சுதந்திரமானவர், கட்டுப்படுத்தப்பட்டவர், இராஜதந்திரம், உள்முக சிந்தனை, நேர்த்தியானவர், தன்னம்பிக்கை, எளிதில் விட்டுவிடாதவர் மற்றும் தனியாக நேரத்தை செலவிடுவதை அனுபவிப்பவர்.
4 வடிவத்தில் உட்காருவது
நீங்கள் நம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும், ஆதிக்கத்துடனும் இருப்பதை இந்த நிலை வெளிப்படுத்துகிறது. நீங்கள் இளமையாகவும், நிதானமாகவும், தன்னிறைவு பெற்றவராகவும், மேலாதிக்கமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். அதோடு பாதுகாப்பாகவும், உங்களுக்குள் திருப்தியாகவும் இருக்கிறீர்கள்.
எதையும் நிறைவேற்ற உங்கள் மனதையும் ஆற்றலையும் செலுத்துவீர்கள். நீங்கள் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து, அவை அனைத்தையும் அடையும் வரை புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உங்கள் தொழில் மற்றும் கல்வி தான் உங்களின் முன்னுரிமை. நீங்கள் உங்கள் இடத்தையும் தனியுரிமையையும் விரும்புகிறீர்கள். எல்லாவற்றிலும் ஒரு தெய்வீக ஒழுங்கைக் காண்கிறீர்கள். நீங்கள் நன்றாக உடை அணிந்து அழகாக இருக்க விரும்பலாம்.
No comments:
Post a Comment