Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 7, 2023

சர்க்கரை நோயை போக்கும் இன்சுலின் இதில் உள்ளதாம்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது.பார்ப்பதற்கு குடை போன்ற வடிவும், அடிக்கடி சாப்பிடவும் செய்யாத உணவு வகைகளில் ஒன்று தான் காளான்.

ஒரு சில காளான்கள் மழை காலங்களில் செம்மண்ணில் இயற்கையாக வளருகிறது. இயற்கையாகவே வளரும் இந்த காளானை சமைத்து சாப்பிட்டால் இறைச்சியை போன்று மிகவும் ருசியாக இருக்கும்.

இப்போது மண்ணின் இயற்கை தன்மைகள் குறைந்து வருவதால் இந்த காளான்களை மழை காலங்களில் கூட பார்க்க முடிவதில்லை.

மேலும் இயற்கையாகவே வளரும் காளான்களில் சில விஷத்தன்மை கொண்டதும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் காளாண் வகைகளில் சுமார் எட்டு வகைகளை தான் நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம். காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விட்டமின்கள்
காளானில் பல வகையான சத்துகள் நிரம்பி உள்ளன. விட்டமின் K, C, D, B, இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துகள் உள்ளன.

எலும்புகளை உறுதிப்படுத்தும்
காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஏனென்றால் காளானில் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறு அதிகமாக உள்ளது. மேலும் ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.

குழந்தைகளுக்கு
காளானில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

இரும்பு மற்றும் செம்பு சத்து
காளானில் இரும்பு மற்றும் செம்பு சத்து அதிகம் உள்ளது. இரத்த ஓட்டத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். மேலும் இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக குணப்படுத்துகிறது. இதில் உள்ள செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய தூண்டுகிறது.

ரத்த அழுத்தம்
பொட்டாசியம் சத்து ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. ஆகவே வாரத்தில் ஒரு முறையாவது காளான் உணவுகளை சாப்பிட தவறாதீர்கள். மேலும் காளானில் உள்ள லென்டிசைன், எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும்.

உடல் எடை
காளானில் நார்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கும்.

சர்க்கரை நோய்
காளானில் கொழுப்பு இல்லை,கார்போஹைட்ரேட்டும் இல்லை. இதில் அதிகளவு ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அதைவிட அதில் நிறைய தண்ணீர் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட காளானில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இவை உணவுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்திடும்.

நோய் எதிர்ப்பு
காளானில் இருக்கும் எர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் நோய் தொற்று உருவாக்க கூடிய கிருமிகள் உடலில் தொற்றாத வண்ணம் பாதுகாக்கிறது. எர்கோத்தியோனின் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.

வைட்டமின் டி
காளானில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

கொலஸ்ட்ரால்
காளானில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. இதிலிருக்கும் ப்ரோட்டீன் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவ வுகிறது. பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.

நீரிழிவு
காளானில் குறைந்த அளவே கார்போஹைட்ரட் சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் கட்டுப்படுத்துகிறது. ஆகவே நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறந்த உணவாக காளான் இருக்கிறது. தினமும் சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பலத்தை அளிக்கும்.

ரத்த சோகை
ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். காளானில் நிறைந்திருக்கும் இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை நோய் வராமல் தடுகிறது. ஆகவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் இதிலிருந்து விடுபடலாம்.

இதயம்
காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் தேற
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News