Join THAMIZHKADAL WhatsApp Groups
வயது 40 தாண்டி விட்டாலே உடம்பில் எதற்காக நோய் ஏற்படுகிறது என்பது தெரியாமல் தொட்டதுக்கெல்லாம் பலவிதமான நோய்கள் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடம்பில் ஏதேனும் ஒரு வழி ஏற்படும். அது வேலை பளுவின் காரணமாக இருக்கலாம் சிலருக்கு வயதாவதால் ஏற்படக்கூடிய வழியாக இருக்கலாம் என பலவகையில் உடம்பில் பலவிதமான வழிகள் ஏற்படுகிறது.
அதுதான் பாத வலி, கை வலி, கால் வலி, மூட்டு வலி, முதுகுத்தண்டு வலி, கழுத்து வலி, குதிங்கால் வலி என அனைத்து வலிகளுக்கும் அதாவது தலைவலியைத் தவிர உடலில் ஏற்படக்கூடிய அனைத்து வலிகளுக்கும் தீர்வான ஒரு எண்ணை எவ்வாறு இயற்கையான முறையில் தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஓமம் 25 கிராம்
2 லிட்டர் தேங்காய் எண்ணெய்
5 கட்டிக் கற்பூரம்
செய்முறை:
முதலில் இந்த ஓமத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அதாவது 3 லிட்டர் தண்ணீர் 2 l ஆகும் வரை நன்றாக கொதிக்க வைத்த பின்னர் 2 லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து மீண்டும் நன்றாக அதை கொதிக்க வைக்க வேண்டும்.
அதில் இருக்கக்கூடிய தண்ணீர் கரைந்து அது முழுவதுமாக எண்ணெயாக மாறும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்னர் இறக்கும் சமயத்தில் 5 கட்டி கற்பூரங்களை சேர்த்து மூடி வைத்து விடவும்.
பிறகு இது நன்றாக ஆரிய பின்னர் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணையை உடலில் எங்கெங்கு வலிகள் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் தடவி வர உடனடியாக வலி நீங்கும். சளி அதிகமாக இருந்தால் நெஞ்சு பரப்பில் இந்த எண்ணெயை தடவி வர சளி உடனடியாக சரியாகும்.
மேலும் இந்த எண்ணெயை வலி இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்த பின்னர் அரிசி வடித்த தண்ணீரில் மஞ்சள் தூள் கல் உப்பு சுக்கு பொடி மூன்றும் சேர்த்து வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர உடனடியாக அனைத்து வலிகளும் சரியாகிவிடும்.
No comments:
Post a Comment