Join THAMIZHKADAL WhatsApp Groups
சில பேருக்கு அடிக்கடி கை கால் மறுத்து போவதுண்டு.
அதற்கான காரணங்கள் என்ன? அதை எப்படி சரி செய்வது எனவே அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
உடலில் உள்ள உறுப்புகள் மறுத்து போவது என்பது நோயல்ல நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.
1. நம் உடலில் எங்காவது மறுத்து போனால் அது நம் மூளை முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சனை என்று அறிகுறி ஆகும்.
2. நம் உடலில் இரண்டு கால்களும் மறுத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாக ஆகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அர்த்தம்.
3. ஒருவருக்கு பல ஆண்டுகளாக மறுத்து போதல் பிரச்சனை இருந்தால் அது மரபணுக்களின் கோளாறாக இருக்க வாய்ப்புண்டு.
4. அதுபோல ஏதேனும் ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகள் என்று தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் கைகால் மருத்துபோதல் பிரச்சனை ஏற்படுகிறது.
5. தைராய்டு ஹார்மோன்களின் சுரத்தல் குறைந்தாலும் கை கால்கள் மறுத்துப் போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
6. உடல் எடை அதிகரித்து உடலில் அதிக அளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மறுத்து போதல் பிரச்சனை ஏற்படுகிறது.
7. சர்க்கரை நோயாளிகள் இந்த மருத்துப்போதல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
8. மது அருந்துபவர்களுக்கு அடிக்கடி கை கால் மறுக்கிறது என்றால் அவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
9. சிலருக்கு தலையில் ஒரு பக்கம் மட்டும் மறுத்து போய்விட்டால் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும்.
யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?அதிகமாக மது அருந்துபவர்களுக்கு
அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு
அதிகமாக பாத்திரம் விளக்குபவர்களுக்கு
மணிக்கட்டுகளில் அதிகம் வேலை தருபவர்களுக்கு
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த கை கால் மறுத்து போதல் பிரச்சனை ஏற்படுகிறது.
இதற்கான தீர்வு:
1. கை கால் மறுத்து போதல் பிரச்சனை இருப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.
2. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொண்டு வரவேண்டும்.
3. அடிக்கடி மருத்துபோதல் பிரச்சனை இருப்பவர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
4. எனவே கொஞ்ச நேரம் ஆவது உடலுக்கு அசைவுகளை தர வேண்டும். அப்பொழுதுதான் ரத்த ஓட்டம் சீராக காணப்படும். இல்லையெனில் ரத்த ஓட்டங்களில் தடைகள் ஏற்பட்டு இதுபோன்று கை கால் மறுத்து போதல் பிரச்சனை உருவாகும்.
No comments:
Post a Comment