Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் அந்த இணையதளத்திலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை மாதம் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளதன.இந்த தேர்வு விடைத்தாள் மறுக்கூட்டல் செய்ய ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மறுக்கூட்டல் செய்ய ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.205 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment