Join THAMIZHKADAL WhatsApp Groups
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதில், 8-ம் வகுப்பு தேர்ச்சி, வயது வரப்பு 14 முதல் 24-க்குள் இருக்க வேண்டும், இந்துவாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்), சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அர்ச்சகர் பள்ளி (வைணவம்), திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்), திருச்சி மாவட்டத்தில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிச்சி பள்ளி (வைணவம்), தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்), திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி (வைணவம்), திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தாண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி (சைவம்) ஆகிய இடங்களில் உள்ள பணியிடங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment