Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்ச்சி குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நேரடி கள ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.கடந்த கல்வி ஆண்டின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை, கடந்த மாதம் வெளியிட்டது.
அதில், ஒரு கல்லுாரியில் மட்டும், 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான்கு கல்லுாரிகளில் அனைவரும், 'பெயில்' ஆகியுள்ளனர். 24 கல்லுாரிகளில், 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றனர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் தேர்ச்சி குறைவதால், தேசிய தரவரிசை பட்டியலில், பல்கலையின் தரம் குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல், சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இணைப்பு அந்தஸ்தை நீட்டிப்பதிலும் பிரச்னை ஏற்படும்.எனவே, தேர்ச்சி குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு வல்லுனர் குழு அனுப்பி, நேரடி கள ஆய்வு செய்யவும், பேராசிரியர்களின் எண்ணிக்கை, கற்பித்தல் தரம், தேர்ச்சி குறைவுக்கான காரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment