Join THAMIZHKADAL WhatsApp Groups
கோவைமாவட்டம், ஆனைமலை நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 16.08.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் | சம்பள விகிதம் | கல்வி தகுதி |
இளநிலை பொறியாளர் | 1 | Level 31 35900 - 113500 | கட்டிடப் பொறியியலில் பட்டயப் படிப்பு |
இளநிலை உதவியாளர் | 2 | Level 22 18500 - 58600 | 10ம் வகுப்பு தேர்ச்சி |
சீட்டு விற்பனையாளர் | 2 | Level 22 18500 - 58600 | 10ம் வகுப்பு தேர்ச்சி |
பிளம்பர் | 1 | Level 19 18000 - 56900 | குழாய் தொழில்/ குழாய் பணியர் பாடப் பிரிவில் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
காவலர் | 3 | Level 17 15900 - 50400 | தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் |
தூய்மை பணியாளர் | 10 | Level 10 10000 - 31500 | தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் |
தொழில்நுட்ப உதவியாளர் | 1 | தொகுப்பூதியம் மாதம் 1-க்கு ரூ.15,000 | கட்டிடப் பொறியியலில் பட்டப்படிப்பு |
நிபந்தனைகள்:
1.விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2 விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூ.100/- செலுத்தி நேரிலோ அல்லது anaimalaimasaniamman.hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
3. விண்ணப்பங்கள் உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை என்ற பெயரில் 16.08.2023 மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வந்து சேரும்படி பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
4. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
5. தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
6. நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு அரசின் பதிவு பெற்ற அரசு உயரதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பங்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
8. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
9. வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
10. நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட் பட்டவை.
11. விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
12. விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களான மட்டுமே இருக்க வேண்டும். அரல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.
இதர விவரங்களை திருக் கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் மற்றும் திருக்கோயில் இணையத் தளத்தில் (www.hrce.tn.gov.in) மற்றும் (https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in) -ல் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment