Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 13, 2023

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உடலின் முக்கிய பகுதியில் ஒன்று தான் தொப்புள். இந்த தொப்புளில் தினசரி எண்ணெய் வைத்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது இங்கே யாருக்கும் தெரியாது.

பொதுவாகவே நாம் வெயில், மழை என மாறி மாறிய வானிலையோடே வாழ்ந்து வருகிறோம். இதனால் நமது உடலில் அதிக சூடு ஏற்படும். இதற்கு விளக்கெண்ணெய் தொப்புளில் ஊற்றுவது ஒரு நல்ல மருந்தாகும். அப்படி இந்த தொப்புளில் என்ன எண்ணெய் வைத்தால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்து பார்க்கலாம்.

கண்பார்வை :

தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

சரும பிரச்சனை:

உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

மூட்டுவலி :

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

உடல்சோர்வு :

உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நரம்புபாதிப்புகள் :

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தேங்காய்எண்ணெய் :

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்:

இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய்:

வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

பாதாம் எண்ணெய் :

சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

ஆலிவ் எண்ணெய் :

தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News