வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவகாசம் முடிந்ததும், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வரும் வியாழக்கிழமை முதல் 17-ந்தேதி (திங்கட்கிழமை) வரை அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளாது.
அதன்படி, இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரைக்கும் இருக்கும் சமர்ப்பி என்ற பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், அந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பதாரர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை மாற்றங்கள் செய்ய இயலாது என்பது போன்ற சில வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment