Join THAMIZHKADAL WhatsApp Groups
கொத்தமல்லி நம்முடைய அன்றாட சமையலில் ஒரு முக்கியமான பொருளாக இருந்து வருகிறது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நம்முடைய முடியை வலுவாக்கும் அதற்கும் மிக வேகமாக வளர்ச்சி அடையச் செய்வதற்கும் மிக முக்கியமானது.
காலையில் தொடர்ந்து நீங்கள் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வரும் பொழுது உங்களுடைய தலைமுடி உதிர்ந்து போகும் விகிதம் குறைவதை கண் கூடாகக் காணலாம். கொத்துமல்லி ஒரு சில செரிமான பண்புகளை கொண்டுள்ளது. ஈரானிய மருத்துவத்தில் செரிமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மிக பிரபலமான ஒரு விதை கொத்தமல்லி.
காலையில் கொத்தமல்லி தண்ணீரை குடிப்பது நாள் முழுவதும் உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது இந்த இரண்டு பண்புகளும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு முக்கியம். மேலும் இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. கொத்தமல்லி ஒரு டையூரிடிக் ஆகும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
காலையில் கொத்துமல்லி தண்ணீரை குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி உடல் சுத்தமாகும். இதனால் காலையில் இருந்து உங்கள் வேலைகளை சரியாகச் செய்வதற்கு ஆற்றலும், சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். கொத்தமல்லியில் இரும்புச் சத்து அதிக அளவு காணப்படுகிறது.
பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளது. காலையில் கொத்தமல்லி தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது உங்களுடைய முகம் மற்றும் சருமம் பொலிவாக பளபளப்பாக மாறும். கொத்துமல்லி தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல் செயல்பாட்டைக் குறைக்க உதவுகின்றன.
மேலும் கொத்தமல்லி தண்ணீர் கீல்வாத வலியை குறைக்க உதவுகிறது. உடலில் நீர்ச்சத்து சரிசமமாக இருப்பதை உறுதி செய்கிறது. சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுத்து உதவுகிறது. முகத்தில் வீக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
இந்த கொத்தமல்லி பானத்தை எளிதில் நீங்கள் உங்களுடைய வீட்டில் தயாரிக்கலாம். ஒரு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை போட்டு இரவில் ஊற வையுங்கள். காலையில் வெறும் வயிற்றில் இந்த விதைகளை வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் குடியுங்கள்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலையில் கொத்தமல்லி தண்ணீரை குடிப்பதற்கு முன்னால் மருத்துவர்களை அணுகி அதன் பிறகு இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். ஏனென்றால் இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
No comments:
Post a Comment